கற்றல் இனிதில் ஒரு வார பயிற்சிக்காக வந்திருந்த குட்டி பெண் இவள் !!
அமெரிக்க வாழ் சிறுமியான இவளோடு ஒரு வாரமும் அன்பும் நிறைவும் கொண்டதாக அமைந்திருந்தது. மரபு விளையாட்டுக்களை ஆர்வமாக கற்றும் விளையாடியும் மகிழ்ந்திருந்தாள்.
 மரபு உணவு பயிற்சியில் அவள் அதிகம் விரும்பியது செம்பருத்தி பூ பானம் !! அவளே தன் கையால் தயாரித்து அருந்துவதும் மற்றவர்களுக்கு செய்து தருவதும் என அவள் விரும்பும் பானமாக அது மாறி இருந்தது !! ஆடுபுலி ஆட்டம் பூப்பறிக்க வருகிறோம் என ஒரு வாரமும் அவள் துள்ளி திரி ந்தது எங்களுக்கு நிறைவை தந்தது !!
 ஆட்டுக்குட்டியை தொட்டு பார்த்து தூக்கி கோழி குஞ்சோடு அன்பு பாராட்டி முத்தம் கொடுத்துஅகத்தி கீரையை ஆட்டுக்குட்டிக்கு உணவாக அளித்து என கிராம வாழியலோடு கலந்து இருந்தாள் !!
பயண வழி கல்வியாக திருநெல்வோலி மாஞ்சோலை கிராமத்திற்கு அவளை அழைத்துச்சென்றோம்.போகிற வழியில்  பறவைகள் தாவரங்கள் குறித்த அவளுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தபடி சென்றது எங்கள் பயணம்

ஆளுமையாளர் தொ.பரமசிவன்  ஐயா அவர்களை காண செய்து தமிழ் குறித்த அவளது பிஞ்சு கேள்விகளுக்கு அவரின் பதில் கிடைக்கப்பெற்றாள்.
ஓவியர் .திரு. சந்த்ரு ஐயாவையும் கண்டு ஓவியம் சிற்பம் குறித்து பல விடயங்கள் அறிய பெற்றாள்.
தொல்பொருள் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருந்த ஐயா அவர்களையும் .தொல்பொருட்கள் ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்தும்  அதைகுறித்து அறியும் வாய்ப்பையும் அவளுக்கு நாங்கள் ஏற்படுத்தி தந்தோம்.
ஆற்று நீரில் நண்பர்களோடு குளிக்கும் போது சிறிய கம்பியில் மீன் பிடிப்பதை பார்த்து வியந்து அவர்கள் அருகில் நின்று வெகு நேரம் அவர்கள் மீன் பிடிக்கும் உத்தியை பார்த்து அவள் வியந்தது இப்பொழுதும் எங்கள் கண்களுக்குள் இருக்கிறது.
மரபு விதை குறித்த கல்வியின் போதும் ஆர்வமாக பங்கெடுத்தாள். மரபு விதைகளை பை நிறைய அள்ளி எடுத்து சென்ற போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !!
நிலா அம்மா என்று கைக்குள் ஒரு வாரம் இருந்து விட்டு அவள் பிரிந்து சென்ற போது பிரிவின்  வலி எங்களுள் நிறம்பி இருந்தது.
நாங்கள் அவளுக்கான கல்வியை சரியாக கொடுத்தோமா என்ற எங்களின் கேள்விக்கு அவள் அம்மாவிடம் இருந்து வந்த செய்தியை பதிலாக எடுத்துக்கொண்டு கொண்டாடினோம் !!
அவள் அம்மா தந்த செய்தி இது தான் !!