இயற்கை வழி பாடசாலை

கற்றல் இனிது

மறக்கப்பட்ட நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது. மாணவர்கள் தாமே இவற்றை கற்க ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த கற்றல் முறை மனத் தெளிவை ஏற்படுத்தும்.

பதிவு செய்க

இத்தரைக்கே உரித்தான மரபு வழி பயிற்றுவித்தலில் நமது தாய்தமிழ் மொழியில் பார்த்தல், கேட்டல், தொடுதல், வினவுதல், மொழிதல் ஆகிய ஐம்பெரும் வழிகளில் மரபு விளையாட்டுக்கள், மரபு கலைகள், மரபு உணவுகள், மரபு மருத்துவம், உழவு, வாணிபம், அரசியல், ஆளுமை, மொழிநடை, திரிபுகள் கடந்த வரலாறு, வாழ்வியல் முறைகளுடன் பற்பல சிறப்பு படிப்பினைகளை செயல்முறையில் விதைக்கிறது கற்றல் இனிது வாழ்வியல் பள்ளி…

சுற்றம்மெங்கும் பிறருக்காய் உற்பத்தி செய்யப்பட்டுவரும் மற்றும் ஒரு பிள்ளையாக
அல்லாமல் தனித்த சிறப்புகளுடன், மானுடத்திற்கே உரித்தான மாண்புகளுடன் வாழ்வாங்கு வாழ இவ்விதைகள் முளைத்து விசாலமாகும். அனைத்தும் தொலைத்த சமூகத்தின் எச்சூழலும் மறைத்திடா ஆழ்தடம் பதித்து வருகிறது கற்றல் இனிது வாழிவியல் பள்ளி

“நம்பிக்கைச் சிறகு சேருங்கள் இணைந்து பறப்போம் வானமே எல்லை!”

நிலா அம்மா, நிறுவனர்- கற்றல் இனிது