தாழி ஆணம் பொடிக்குழம்பு இது மண்பானையில் வைப்பதால் இது தாழி ஆணம்னு சொல்வாங்க இதுகல்யாணத்துக்கே மண்பானையில்தான் வைப்பாங்க எத்தனை தேவையோ அத்தனை பானை வைப்பாங்க.

 

ஒரு பானைக்கு 10 கிலோ கறி மட்டுமே அளவு இது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே செய்வார்கள் நான் செய்முறை வீட்டளவிற்கு தருகிறேன் பிடித்தவர்கள் செய்து பாருங்கள் தேவையான பொருட்கள் கறி 1/2 கிலொ மல்லி 100 கிராம் அரிசி 25 கிராம் மிளகு 1ஸ்பூன் பூண்டு 100கிராம் சின்ன வெங்காயம் 25 எண்ணிக்கை மிளகாய்தூ1ஸ்பூன் மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன் நெய் ,நல்ல எண்ணைய் 50 மிலிகிராம் வெந்தயம் 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் 1/2கிலொ கறிக்கு 100 மல்லி வாசம் வர நன்கு வறுக்கனும் வறுத்து ஆரவைக்கவும் .மிக்ஸியில் நைஸாக அரைத்து பொடிக்கவும் மிளகு 1 ஸ்பூன் சட சடவென பொரியும் வரை நன்கு வறுக்கவும் புழுங்கல் அரிசி25 கிராம் நன்கு பொரிய வறுக்கவும் மிளகும் அரிசியும் ஒன்றாக மிக்சியில் மிகவும் நைஸாக பொடிக்கவும் அதேபோல் வறுத்த மல்லியையும் மிகவும் நைசாக பொடிக்கவும் அடுப்பில் வெறும் குக்கரிலோ பாத்திரத்திலோ வெந்தயம் 1 ஸ்பூன் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும் கருகிவிடாமல் பிறகு அதில் நெய் 1 ச்ஸ்பூனும் நல்ல எண்ணைய் 3அல்லது 4 ஸ்பூன் கொஞ்சம் அதிகமாகவே ஊத்தலாம் எண்ணைகாயவும் சீரகம் சிரிய வெங்காயம் 25 நறுக்கி போட்டு வ்தக்கவும் அதனுடன் கறியும் சேர்த்து மூடிவைத்து வதக்கவும் பாதிவதங்கும் போது மஞ்சள்தூள் தேவையான உப்பு சேர்த்து அதன் தண்ணீர் வற்றியவுடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் வெந்தவுடன் மிளகாய்தூள் அரிசி மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும் குழம்பு எவ்வளவு தேவையோ அவ்வளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் தேவையானால் உருளைகிழங்கு சேர்கலாம் பிறகு வறுத்து அரைத்த மல்லி பொடியுடன் வெள்ளைபூண்டை வைத்து ஒன்ர்றிரன்டாக தட்டிவைத்துக்கொண்டு குழம்பின்மேலாக தூவி கிண்டிவிட்டு மூடி ஒருசில நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும் வரலாற்று குறிப்பு பிறமலைக்கள்ளர் சமூகத்தில் தான் திருமணத்தின் போது கருகமணி அணியும் பழக்கமும் இந்த கறி சால்னாவை பொது இடத்தில் சமைத்து அனைவரும் பகிர்ந்து உண்டதன் நீட்சியாக இஸ்லாத்தை தழுவி இருந்தாலும் இன்றும் புதுக்கோட்டை ஆலங்குடி இலுப்பூர் அண்டக்குளம் புத்தாம்பூர் போன்ற ஊர்களில் தாய் பழக்கவழக்கங்களை மறக்காமல் திருமணத்தில் கருகமணி கட்டுவது வருடத்தில் ஒவ்வொரு மீலாது நபியின் போதும் திருமணத்தின் முதல் நாள் விருந்தில் இந்த தாளி சால்னா சமைத்து உண்ணுவது தொடர்ந்து வருகிறது