மரபு விளையாட்டு வழிக் கல்வி: 

தமிழகத்தில் வலுவிழந்து போன வீர விளையாட்டுகளை நம்முடைய கற்றல் இனிது பள்ளி வாயிலாக மீட்டெடுத்து வர பயிற்சியளிக்கப்படும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வீரவிளையாட்டுக்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக  மட்டுமல்ல. மரபு சார்ந்த அறிவு, பண்பாட்டின் அடையாளங்கள் ஆகியவற்றை மக்கள் முன் எடுத்துரைக்கும் களமாக வீரவிளையாட்டுக்கள் இருந்து வந்தன.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் வரலாறு உண்டு,இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் பண்பாட்டின் அடையாளங்கள்.இவற்றை பள்ளி கல்லூரிகளில் நடத்துவது சாத்தியமற்றது.நம் பழந்தமிழர்கள் விளையாடிய பல வீரவிளையாட்டுக்கள் தொலைந்துவிட்டன.

வீரவிளையாட்டுக்களில் கபடி, சிலம்பம் , வழுக்குமரம் ஏறுதல், வில் அம்பு, புலியாட்டம், உரியடி, வடம் இழுத்தல், சுருள் வாள் சுழற்றுதல், வாள் சண்டை, கவட்டை வில் எறிதல் போன்ற சில விளையாட்டுக்கள் மட்டுமே அரிதாக இருக்கின்றது. நாட்பட இதுவும் மறைந்து வருகிறது.“.

நமது கற்றல் இனிது பள்ளியின் நோக்கம் வீர விளையாட்டுக்கள் பாதுகாப்பது ஆகும். அவை நம் பண்பாட்டின் ஒழுக்கத்தின் அடையாளம் ஆகும்.எனவே மேற்கண்ட வீர விளையாட்டுக்களை பயிற்றுவிக்கவிருக்கிறோம்.

தமிழர்களின் விளையாட்டு எத்தனை என்பது தெரியுமா ?

விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்பதும் சில இடங்களில் கால்பந்து கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் காலை இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றாலும் கணினியில் விளையாடுவதும் இது தான் விளையாட்டு என்றாகி விட்டது.

பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்கள் இன்று அழிந்து போய் வருகின்றன.

இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளையாடப்படுவதில்லை. சிறுவர் (பையன்கள்) ஆண், பெண் என இரு பாலருக்கும் , அணி விளையாட்டு என பல வகை இருந்துள்ளது.