வெற்று காகிதமாகவே இந்த நாடக கலைஞன் முன் அமர்ந்திருந்தேன்.அவர் உச்சரித்த முதல் வாக்கியங்களில் ஆரம்பித்த என் சிரிப்பொலி நிகழ்வின் முடிவுவரை நீடித்தது.கதைகள் மூலமாக ஒரு குழந்தைக்கு ஒழுக்கமும் சூழியலும் வரலாறும் கற்று தர முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கையில் ஒன்று. நான் கதை பேசியிருக்கின்றேன். கதை கேட்டும் இருக்கின்றேன். கற்றல் இனிது பள்ளியில் பிள்ளைகளுக்கு உரையாடவும் வாசிக்கவும் கட்டுரை எழுதவும் நான் கவனம் எடுத்துக்கொள்வதுண்டு.சூழியல் சார்ந்த அவர்கள் பார்வை நாளுக்கு நாள் மாறுவதை நான் உணர்ந்திருக்கின்றேன். நான் கதைகளோடு உறவாடினாலும் கதைகள் எனக்கு இது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியதில்லை. முருகபூபதி அண்ணா அவர்களுடைய கதை அந்த களத்திற்கே என்னை அழைத்து சென்றது. நான் அவருடைய கதையின் உள்சென்று அவர் கதையோடே வாழ்ந்து திரும்பினேன் ! எத்தனை நாள் வேண்டுமானாலும் வயிற்றுக்கு உணவை தேடாமல் அவர் கதை கேட்டு
பசியாறலாம் போல். சிரித்து சிரித்து வாய் வலித்து தான் போயிருந்தது..என்ன மனிதர் இவர்..வாய்ப்பிருப்பவர்கள் அவரின் கதையை ஒருமுறையாவது கேட்டுவிடுங்கள் !

கற்றல் இனிது மரபு திருவிழாவிற்கு அவர் வருகை தந்தது எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும்.

Image may contain: 2 people, people standing