கதை வழிக் கல்வி:

“கதை உலா” நிகழ்ச்சி வாயிலாக சுழல் சார்ந்த,மரபு சார்ந்த மண் சார்ந்த விழிப்புணர்வு கதை சொல்லுதல்.

கலை வழிக் கல்வி:

கலைகள் = கரகாட்டம், பறையாட்டம் ,கும்மிகாவடி,மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை,பொம்மலாட்டம், தெருக்கூத்து,புலியாட்டம், போன்ற  நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் கற்பிக்கப்படும்.அயல்நாட்டு மோகத்தின் கோரப்பிடியில் நம் பாரம்பரியங்களை மறந்துவிட்டு அந்நிய நாட்டு விளையாட்டுகளுக்கும் ,வீடியோ கேம்களுக்கும் நாம் குழந்தைகளை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறோம்.இதன் விளைவாக நமது பாரம்பரிய விளையாட்டுக்களை தொலைத்துவிட்டு நிற்கின்றோம்.நமது தமிழர்கள் கண்டுபிட்த்த விளையாட்டுக்கள் அனைத்தும் உடல்,மனம், சிந்தனை ,மொழி,கலாச்சாரம் ,பண்பாடு,கணிதம் , வாழ்க்கைமுறை ,விடாமுயற்சி, உடல் பலம்,ஆரோக்கியத்தை வழங்கக்கூடியதாக இருந்து வந்திருக்கின்றது.இவையெல்லாம் நம் மனதிற்கும் உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடியவைகளாக இருந்து வந்திருக்கின்றது.இன்று நம் பிள்ளைகள் விளையாடும் எந்த ஒரு விளையாட்டும் உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் அளிப்பதில்லை.மேலும் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.பழந்தமிழர் விளையாட்டுக்களை மீட்டெடுப்பது குறித்த பயிற்சிகளை கொடுத்து நமது பாரம்பரியத்தை கட்டிக் காப்பதும் கற்பிக்கப் படும்.