மே மாதம் ஒன்றாம் தேதி வாழ்வியல் பயிற்சியின் முதல் நாள் சிறப்பு விருந்தினராகவும் வேளாண் பயிற்சியாளராகவும் ஐயா பாமயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாமே விதைத்து பழங்கள் உண்டாக்கி பறித்து திண்ணும் சுகம் தனியல்லவா..! வாழை மரம் ,கொய்யா மரம் , முருங்கை மரம் என்று நம் வீடைச்சுற்றி மரத்தோடு ஆரோக்கியத்தையும் வளர்த்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம்.நுகர்வு கலாச்சார பிடியில் சிக்கி உழவு மறந்து நல்ல உணவு மறந்து இருக்கின்றோம்.

இதோ நாங்கள் அந்த விதைக்கும் மகிழ்ச்சியை அடுத்த தலைமுறைக்கு தர தயாராகிவிட்டோம்..! பாமயன் ஐயா விதைகளோடு பயிரிடும் முறை கற்றுக் கொடுத்தார்.இனி என் பிள்ளைகளின் கைகள் மண்ணையும் விதையையும் நேசிக்கத்தொடங்கும்.

Image may contain: 1 person
Image may contain: 1 person
Image may contain: 1 person
Image may contain: 4 people, people smiling, outdoor
Image may contain: 2 people, outdoor