இயற்கை வழி உழவாண்மை கல்வி :

இந்திய  உழவாண்மை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக வரலாற்றைக் கொண்டது. ஆறாயிரம் ஆண்டுகாலமாக எத்தனையோ சோதனைகள் செய்து தனது அறிவை இந்த சமுதாயம் சேகரித்து வைத்துள்ளது. இந்த அறிவை பின்வரும் தலை முறைக்கு தொடர்ந்து கைமாற்றி வந்துள்ளது. நிலங்கள் தொடர்ந்து வளமேறி வந்துள்ளன. கால்நடைகளும் மேம்பட்டு வந்திருக்கின்றன.

ஆனால் கடந்த நாற்பதாண்டுகளில், ஆறாயிரம் ஆண்டுகால வளர்ச்சி பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் நமது வளர்ச்சிப் பாதையை தவறவிட்டோம் என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் உயிரினப்பன்மை குறித்துப் பேசுகிறார்கள். இன்று உயிரினப்பன்மை அழிக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாயிரம் வகை உணவுப்பொருள்களை மக்கள் உண்டார்களாம். ஆனால் இன்று இருபது வகை

இடத்தில் நமது வளர்ச்சிப் பாதையை தவறவிட்டோம் என நாம் அறிந்து கொள்ள வேண்டும். இன்று உலகம் முழுவதும் உயிரினப்பன்மை குறித்துப் பேசுகிறார்கள். இன்று உயிரினப்பன்மை அழிக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாயிரம் வகை உணவுப்பொருள்களை மக்கள் உண்டார்களாம். ஆனால் இன்று இருபது வகை . எனவே நோய்க்கு இரையாகின்றனர். கடந்த சில பத்தாண்டுகளில் இந்த அவலமும் நேர்ந்துள்ளது.

கோ.நம்மாழ்வார்

“விதைகளைப் பண்படுத்துவோம் என்ற உயர்ந்த நோக்கில் அடுத்த தலைமுறைக்கு இயற்கை உழவாண்மை பயிற்சி கைதேர்ந்தவர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப் படுகிறது”

நமது முன்னோர்கள் நாட்டுரக விதைகளை அதாவது வறட்சியை தாங்கும் தன்மை கொண்ட விதைகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது வீரிய விதைகள் வரவால் வறட்சியைத் தாங்க முடியாமல் விரைவில் கருகிப் போய் விடுகின்றன.

அதிக விளைச்சல் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் பூச்சுக் கொல்லி மருந்துகளையும் ரசாயன உரங்களையும் பயன்படுத்தி மண்வளத்தைக் கெடுத்து விளைநிலத்தை பாழ்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த ரசாயன உரங்களாலும் பூச்சுக் கொல்லி மருந்துளாலும் பலவித உடல் நல பாதிப்புகள் உண்டாவதை ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் எடுத்துரைத்து வருகின்றனர்.

ஆனால் அதற்கு மாற்றுவழி இல்லை என்று நினைத்து பெரும்பான்மை விவசாயிகள் ரசாயன உரங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிக மகசூல் பெற வேண்டும் என்ற அறியாமையில் சிக்கி இயற்கை விவசாயத்தை தவிர்த்து வந்ததன் விளைவு மனித ஆரோக்கியத்திற்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.

பூச்சி மருந்துகள் இல்லாத இயற்கை முறையில் உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்து அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க விவசாய சமூகம் முன் வர வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை பயிற்று வித்தும் விவசாயம் குறித்த அவசியத்தையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தும் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்த பயிற்சி வகுப்புகள் அமையும்.

தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுக்க மண் வளம் சீரழிந்து வருகின்றது. மண்ணில் உப்புத் தன்மை அதிகரித்து வருகிறது. இயற்கை முறை விவசாயத்தாலும், நீர் அதிகம் தேவைப் படாத சிறு தானியங்களை பயன்படுத்துவதன் மூலமாகவும் மண்வளத்தை மீட்டெடுக்கலாம்.

மண்புழு உரமும், சாணமும் சிறந்த உயிர்ச்ச்சத்துள்ள உரமாகவும், கோமியம் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் இருந்து வருகிறது“.

ஆனால் பெரும்பாலான விவசாயிகள் இதனை புரிந்து கொள்வதேயில்லை. நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி மக்களுக்கு இயற்கை விவசாயம் மேலிருந்த அக்கறையும் மரியாதையும் அறவே இல்லாமல் போய்விட்டது.

ரசாயன உரங்களை பயன்படுத்தி கிடைக்கும் மகசூலை விட இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெற முடியும்.

நம் பாரம்பரிய விவசாயத்தையும் ,சிறுதானியங்கள் பயிரிடுதல் ,மண்வளப் பாதுகாப்பு,வீட்டுத் தோட்டம் ,உயிர் உரங்கள்,இயற்கை வழி விவசாயம், மண்புழு உரம் தயாரிப்பு போன்ற அம்சங்களை பயிற்சியில் கற்றுக்கொடுக்கவிருக்கின்றோம்“.

இதனால் ஆரோக்கியமான வளமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் உருவாக்க முடியும்