இயற்கை மருத்துவ வழிக் கல்வி :

பாரம்பரிய வைத்திய முறைகள்  நமக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று பார்த்தோமேயானால் மூலிகைகள் கொண்டு நோய்களை குணப் படுத்துகின்றனர்.இயற்கை மனிதனுக்கு தேவையான பல்வேறு தாவரங்களையும் மூலிகைகளையும் நோய் தீர்க்கும் மருந்தாக வழங்கியுள்ளதுஅதனைப் பகுத்தறிந்து பிணிதீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு உண்டாக்குவதாகும்,

ஆரோக்கியம் குறித்த ஆர்வம் பெருகி வரும் இந்த நேரத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கட்டமைப்பை பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும் கற்பித்துத் தரப்பட்டும்.

நமது பாரம்பரிய மருத்துவர்கள் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டவை. இன்றைய சமுதாய கேடுகளை களைந்து நம் பாரம்பரிய அறிவை மீட்டெடுக்க வேண்டும்.உணவே மருந்து, மருந்தே உணவு எனும் தத்துவத்தை  நம் பாரம்பரியங்கள் நமக்காக கொடுத்துள்ளது,அதை பின்பற்றி நடக்க வாழ்வியல் முறையில் கற்றுக் கொடுக்கப்படும்